தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு அபிஷேகம் - பெருவுடையார்
🎬 Watch Now: Feature Video
தஞ்சை: புகழ்பெற்ற பெருவுடையார் ஆலயத்திற்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தை மாத முதல் பிரதோஷத்தையொட்டி பெரிய கோயிலில் வீற்றிருக்கும் மகா நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, திரவியப் பொடி, மஞ்சள், பால், இளநீர், தயிர், சந்தனம், கரும்புசாறு, எலுமிச்சை சாறு, பஞ்சாமிர்தம், பன்னீர், தேன் உள்ளிட்ட திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.