வீடியோ: 'வேண்டாமே போதை' எனும் விழிப்புணர்வு ஓவியம்: மதுபாட்டிலாலேயே வரைந்த ஆசிரியர் செல்வம்
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம். ஜூன் 26 போதைப்பொருளுக்கு எதிரான உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரஷ்க்கு பதிலாக காலி "மதுபாட்டிலாலேயே" வேண்டாமே போதை எனும் விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்தார். இந்த விழிப்புணர்வு ஓவியத்தை 35 நிமிடங்களில் செல்வம் வரைந்தார். வித்தியாசமாக பிரஷ் பயன்படுத்தாமல், காலி மதுபாட்டிலாலேயே விழிப்புணர்வு படத்தை வரைந்த செல்வத்தை பெண்கள் பாராட்டினர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST