ETV Bharat / health

பைல்ஸ் பிரச்சனையா? சுக்கு, திப்பிலி போதுமே..ஆயுர்வேத மருத்துவர் செல்லும் மருந்து என்ன? - ayurvedic treatment for piles - AYURVEDIC TREATMENT FOR PILES

piles medicine in tamil: யாரிடமும் சொல்ல முடியாமல்..நடக்க முடியாமல்..சில நேரங்களில் உட்கார கூட முடியாத நிலைக்கு எடுத்துச்செல்லும் பைல்ஸ் பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம், ஆயுர்வேத மருத்துவர் செல்லும் இந்த மருந்தை வீட்டில் செய்து சாப்பிட்டு வந்தால் எளிதாக பைல்ஸ் பிரச்சனையை குறைக்கலாம்..செய்து பாருங்கள்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 28, 2024, 9:01 AM IST

ஹைதராபாத்: நமது கண்களால் பார்க்க கூடிய இடத்தில் ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் வந்தால்,அதன் தீவிரத்தை பார்த்து அதன் நிலையை மதிப்பிடலாம். ஆனால் கண்களுக்குத் தெரியாத சில பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைளின் வலியை நம்மால் விவரிக்க கூட முடியாத ஒன்றாகும். மூலம் (Piles) அப்படிப்பட்ட ஒரு பிரச்சனை தான்.

சிலருக்கு, மருந்துகள் எடுத்துக்கொள்வதால் இந்த பிரச்சனையை குணப்படுத்த முடியும், இன்னும் சிலருக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வாக இருக்கிறது. இந்த இரண்டையும் தவிர வேறு வழிகளே இல்லையா? என்றால் ஆயுர்வேதத்தில் நல்ல தீர்வு உள்ளது என்கிறார் பிரபல ஆயுர்வேத நிபுணர் காயத்ரி தேவி. வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் மருந்தை தினமும் சாப்பிடுவதன் மூலம் பைல்ஸ்-ஐ குறைக்க முடியும் என்கிறார். அப்படி, பைல்ஸ்-ஐ குறைக்க உதவும் ஆயுர்வேத மருந்தை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்

தேவையான பொருட்கள்:

  • தண்ணீர் - தேவையான அளவு
  • அரிசி - 1 கப்
  • திப்பிலி தூள் - 1 ஸ்பூன்
  • சுக்குத்துள் - 1 ஸ்பூன்
  • மோர் - ஒரு டம்ளர்
  • மிளகு தூள் - 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

  • முதலில், அடுப்பை ஒரு பாத்திரத்தில் வைத்து, 2 முதல் 3 கப் கப் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும்
  • தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும், ஒரு கப் அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.
  • அரிசி நன்றாக வெந்ததும் அதில், சுக்கு மற்றும் திப்பிலித்தூளை சேர்க்கவும். இந்த கலவை கஞ்சி பதத்தில் இருக்க வேண்டும்.
  • இதையெல்லாம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்
  • இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ளதை ஒரு பாத்திரத்தில் எடுத்து மோர் மற்றும் மிளகுத் தூளை சேர்த்து சாப்பிடலாம்

எப்படி சாப்பிடுவது?: இந்த மருந்தை எந்த நேரத்திலும் சாப்பிடலாம் என்கிறார் டாக்டர் காயத்ரி தேவி. ஒரு நாளைக்கு ஒரு முறை இதை எடுத்துக்கொள்வதன் மூலம் பைல்ஸ் பிரச்சனையை குறைக்கலாம் என்றார். நீங்கள், உணவுக்குப் பிறகு தயிர் சாதம் சாப்பிடுபவர்களாக இருந்தால், அதைத் தவிர்த்து இந்த மருந்தை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETVBharat TamilNadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.