thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

ETV Bharat / Videos

சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழை! பொதுமக்கள் மகிழ்ச்சி - chennai rain

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

இன்று காலை முதல் மதியம் வரை சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. சென்னை  தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.

தொடர்ந்து, அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீட்டுக்கு செல்லும் மக்கள் பேருந்து நிலையத்தில் நனைந்தபடி சென்றனர். மேலும், தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த மழையால் இப்பகுதியில் குளிர்ந்த சூழல் நிலவியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.