தேனி சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை! - Antipatti
🎬 Watch Now: Feature Video
தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை வனப்பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வனப்பகுதியில் கனமழை பெய்ததால், மேகமலை அடிவாரத்தில் அமைந்து உள்ள சுற்றுலாத் தலமான சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து சற்று அதிகரித்தே காணப்பட்டது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகச் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் அருவியிலிருந்து வெளியேற்றினர்.
சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றிய சில நிமிடங்களில் சின்ன சுருளி அருவியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. செந்நிறத்தில் தண்ணீர் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனை அடுத்து சின்ன சுருளி அருவிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். நீர்வரத்து குறைந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
மேலும், கடும் மழை பெய்யும் போதே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் அருவியிலிருந்த மக்களை வெளியேற்றியதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோடை விடுமுறையையொட்டி சின்ன சுருளி அருவி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
இதையும் படிங்க: "எப்பா.. என்னா வெயிலு" கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!