Palani - அமைச்சர் தொகுதியில் அத்துமீறல் - ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்களை வைத்து சுத்தப்படுத்த வைக்கும் அவலம் - palani
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: பழனி(pazhani or palani) அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் கீரனூரில் இருக்கும் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களை விடுதி நிர்வாகம், மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதி அறைகள், அதன் வளாகங்களை மாணவர்களை வைத்து தூய்மைப் பணி செய்ய வைக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
பள்ளி மாணவர்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்பது தெரிந்தும் விடுதி ஊழியர்கள் எப்படி மாணவர்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தினார்கள் என்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆதி திராவிடர் மாணவர் நல விடுதி ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொகுதியில் உள்ளது.
இந்த விடுதியில் உடனடியாக ஆதிதிராவிட நலத்துறை மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து மாணவர்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்திய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.