கோவை நல்லாயன் தொடக்கப்பள்ளி 'மாணவர்கள் தேர்தல்' முடிவுகள் வெளியீடு!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் (ஜூலை 17) ஆம் தேதி 'மாணவர் தேர்தல்' வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி செயல் அதிகாரி உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாக்களித்தனர். இதனையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, மாணவத்தலைவராக சஜ்ஜாத் முஜாஹித் 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவராக ஹிஸாம் அஸ்லம் 182 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பள்ளி உணவுத்தலைவராக ஜெரோம் ரையான் 133 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பள்ளி விளையாட்டு தலைவராக இம்ரான் 173 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பள்ளி சுற்றுச்சூழல் தலைவராக முகமது பாரிஸ் 119 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மேலும், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பள்ளியின் ஆசிரியர் விமல் வெற்றி சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். இதனிடையே வெற்றி பெற்ற மாணவர்களை சக மாணவர்கள் தூக்கிக் கொண்டாடினர்.
இதனையடுத்து வருகின்ற (ஜூலை 21)ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெற்றி பெற்ற மாணவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கலந்து கொண்டு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதையும் படிங்க:Chennai Crime News: மாஜி பாஜக பிரமுகர் கைது; பிரபல ரவுடி கைதின் பின்னணி!