திருப்பத்தூர் ஸ்ரீ மாய விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: சுமார் 200 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த சுயம்பாக உருவாகிய பிரசித்திபெற்ற மூல முதற்கடவுள் ஸ்ரீ மாய விநாயகருக்கு 4 யாக குண்டம் அமைத்து மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக திருவிழாவில் காலை 9 மணி முதல் மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், விநாயகர் பூஜை, தீபாராதனை, ஸ்ரீ ராஜ கோபுர விமான கோபுரங்களுக்கு தானிய கலசம் வைத்தல் உள்ளிட்டப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோபுரத்தின் மேலே உள்ள கலச குண்டலத்தின் மீது புனித நீர் ஊற்றி பின்னர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக திருவிழாவில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.