கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்.. கண்ணன் மற்றும் ராதையாக உலா வந்த மழலையர்கள்!
🎬 Watch Now: Feature Video
Published : Sep 5, 2023, 5:58 PM IST
கும்பகோணம்: கொரநாட்டுக்கருப்பூர் புறவழிச்சாலையில் அமைந்துள்ள கார்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று (செ.5) கிருஷ்ண ஜெயந்தியினை முன்னிட்டு பள்ளி கலையரங்களில், அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலை வைத்து, அவருக்கு பிடித்தமான, லட்டு, வெண்ணெய், சீடை, அதிரசம், எள்ளடை, முறுக்கு, தட்டை ஜாங்கிரி, அவல் பொரி கடலை, எனப் பல விதமான இனிப்பு மற்றும் கார வகைகளும், பழ வகைகளும் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் பள்ளி மழலையர்கள், கண்ணனாகவும், ராதையாகவும் தங்களை அழகாக அலங்கரித்து வந்து பங்கேற்றனர். நூற்றுக்கணக்காண கண்ணன்களையும், ராதைகளையும் ஒரே இடத்தில் கண்டது அந்த இடத்தை மிக அழகாக காட்சியளித்தது. மேலும், இவர்கள் கிருஷ்ணனுக்கான பாடல்களுக்கு அழகாக நடனம் ஆடி, பாடி அசத்தி, சக பள்ளி மாணவ மாணவியர்களையும், ஆசிரிய பெருமக்களையும் வெகுமாக ரசிக்கவும், மகிழ்விக்கவும் செய்தனர்.
நாளை (செ.6) தேசம் முழுவதும், கண்ணன் பிறப்பை போற்றி கொண்டாடும் வகையில் கோகுலாஷ்டமி (எ) கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.