ETV Bharat / state

திமுகவில் 4 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு பதவி! - APPOINTMENT OF DT IN CHARGES IN DMK

திமுகவில் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பொறுப்பாளர்களை திமுக நியமனம் செய்துள்ளது.

திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயம்
திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2025, 8:14 PM IST

சென்னை: திமுகவில் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல நான்கு மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தியூர், பவானி சாகர், கோபிசெட்டிப்பாளையம் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு வடக்கு மாவட்டத்துக்கு என்.நல்லசிவம், பவானி, பெருந்துறை தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மத்திய மாவட்டத்துக்கு தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்லடம், திருப்பூர் தெற்கு தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் கிழக்கு மாவட்டத்துக்கு செல்வராஜ் எம்எல்ஏ, காங்கேயம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட திருப்பூர் மேற்கு மாவட்டத்துக்கு மு.பெ.சுவாமிநாதன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவினாசி, திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட திருப்பூர் வடக்கு பொறுப்பாளராக என்.தினேஷ்குமார், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இல.பத்மநாபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செஞ்சி, மயிலம், திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட விழுப்புரம் வடக்கு மாவட்டத்துக்கு பொறுப்பாளராக செஞ்சி கே.எஸ்.மஸ்தான், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்கு பொறுப்பாளராக கெளதமசிகாமணி, விழுப்புரம், வானூர் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்கு பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை வடக்கு பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை வடக்கு, மதுரை மத்திய, மதுரை தெற்கு தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாநகர் பொறுப்பாளராக கோ.தளபதி எம்எல்ஏவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

4 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த க.அண்ணாத்துரை எம்எல்ஏ, விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக பழனிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட செயலாளராக இருக்கும் பா.மு.முபாரக் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.எம்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளராக இருக்கும் டி.பி.எம்.மைதீன் கான் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மு.அப்துல்வாகாப் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் நீக்கப்பட்டு அவருக்கு பதில் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்,"என கூறப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் நியமனம், மாற்றத்தின் பின்னணி

மேற்கு மாவட்டங்களை குறி வைத்து ஈரோட்டில் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவரும், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்து எம்.எல்.ஏ ஆனவருமான லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு கூடுதல் பிரதிநித்துவமாக திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்கு அப்துல் வஹாப்பும், விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு செஞ்சி மஸ்தானும் மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரியில் படுகர் சமூகத்திற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கே.எம்.ராஜூ புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர்களுக்கு பிரதிநித்துவம் அளிக்கும் வகையில் திருப்பூர் மேயர் தினேஷ் இரண்டு தொகுதிகளுக்கு மாவட்ட பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூரில் தலித் சமூகத்திற்கு பிரதிநித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ்ராஜ் ஒன்றியச் செயலாளராக உள்ளார்.

தஞ்சாவூரில் வெள்ளாளர் சமூகத்தைச் சார்ந்த பழனிவேலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், மாற்றுகட்சியில் இருந்து வந்தவர்கள், இஸ்லாமிய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம், தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.