சனாதன தர்மம் - "அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் திட்டத்தை யார் கொண்டு வந்தது" - உதயநிதி பேட்டி! - Abolition of Sanatana Dharma
🎬 Watch Now: Feature Video
Published : Sep 6, 2023, 12:19 PM IST
சென்னை: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது, இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று பிரதமர் மோடி பெயர் வைத்தது குறித்து கேட்ட கேள்விக்கு, இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது தனக்கு தெரியாது என்று பதில் அளித்தார். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பதை திமுக நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றசாட்டிற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 100 ஆண்டுகளாக சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக பேசி வருகிறது.
இது திசை திருப்பும் நோக்கம் அல்ல என்று தெரிவித்தார். மேலும் அதை திமுக அரசு, சனாதன தர்ம ஒழிப்பை நடைமுறைக்கும் கொண்டு வந்தும் உள்ளது என்றார். திமுக தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்கையில் தெரிவித்துவிட்டு சென்றார்.