கிறிஸ்துமஸை வரவேற்க கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் சிலுவை பூக்கள்! - சுற்றுலா பயணிகள்
🎬 Watch Now: Feature Video
Published : Dec 21, 2023, 12:53 PM IST
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கொடைக்கானல் திகழ்ந்து வருகிறது. இங்கு கால நிலைக்கு ஏற்ப பல்வேறு வகையான பூக்கள் பூத்துக் குலுங்கும். தற்போது கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாகவே மிதமான முதல் கனமழை வரை பெய்தது.
இந்த நிலையில், டிசம்பர் மாதங்களில் கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக சிலுவை பூக்கள் பல்வேறு பகுதிகளில் பூத்துக் குலுங்குகிறது. இவ்வகை பூக்கள் டிசம்பர் மாதத்தில் மட்டும் பூப்பதாலும், இது சிலுவை வடிவத்தில் இருப்பதாலும், இந்த பூக்கள் சுற்றுலா பயணிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது கொடைக்கானலில் கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக சிலுவை பூக்கள் பூத்துக் குலுங்கத் துவங்கியுள்ளது.
ஆகையால், இந்த அரிய வகை சிலுவை பூக்கள்களைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை புரிகின்றனர். மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் இந்த பூக்களை கண்டு ரசித்தும், அவற்றுடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலுவை பூக்கள் பூத்துக் குலுங்கும் காட்சியைப் பார்த்து கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மன மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.