Bakrid 2023: பக்ரீத் பண்டிகையையொட்டி சமயபுரம் வார ஆட்டுச்சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை - பக்ரீத் பண்டிகையையொட்டி களைக்கட்டிய சமயபுரம்
🎬 Watch Now: Feature Video
திருச்சி: வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை (Bakrid Festival) கொண்டாடப்படும் அன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஆடுகளை அறுத்து ஏழை எளிய மக்களுக்கு குர்பானி கொடுத்து தொழுது, ஒற்றுமையுடன் இணைந்து வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது வழக்கம். கூட்டு குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வாங்குவார்கள்.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுங்கச்சாவடி அருகே சனிக்கிழமைதோறும் ஆட்டுச்சந்தை நடைபெறும். ஆடுகள் விற்பனை வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையினை முன்னிட்டு, ஆடுகள் விற்பனைக்கு அதிகளவில் வந்துள்ளன.
இந்த ஆட்டுச் சந்தைக்கு சமயபுரம், முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, பாடாலூர், கல்லக்குடி, சிறுகனூர், தச்சங்குறிச்சி, புரத்தாக்குடி, திருவெறும்பூர், துவாக்குடி உள்ளிட்டப் பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தாங்கள் வளர்த்த வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வாரந்தோறும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதை வாங்குவதற்காக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காகவும் ஆட்டுக்குட்டிகளை வளர்ப்பதற்காகவும் வாங்கிச் செல்கின்றனர்.
வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால், வழக்கத்தை விட ஆட்டுச்சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் கொள்முதல் செய்வதற்கு அதிக அளவில் வியாபாரிகள் வந்த வண்ணம் உள்ளனர். பக்ரீத் பண்டிகைக்காக அதிக அளவில் ஆடுகளை விற்பனை செய்வதற்காக ஆடு விற்பனையாளர்களும் ஆடுகளை வாங்க வியாபாரிகளும் வந்துள்ளனர்.
மேலும் வழக்கத்தைவிட ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடி வரை விற்பனையாகும், என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று (ஜூன் 24) நடைபெற்ற வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. மேலும், 50 லட்ச ரூபாய்க்குள் வர்த்தகம் நடைபெறும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆடு வாங்க வந்த நபர் விஜயராகவன் கூறுகையில், கடந்த 3 வாரமாக செம்மறி ஆடுகள் இறக்குமதி அதிகமாக உள்ளதாகவும், செம்மறி ஆடுகளின் வரத்து அதிகரிப்புக் காரணமாக விலைவாசி குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சமயபுரம் சந்தையில் கடந்த வார விற்பனையை விட இந்த வாரச் சந்தையில் விற்பனை சற்று குறைவாகவே உள்ளது. இந்த வாரச்சந்தையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றார்.