பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.. ரூ.96.17 லட்சம் காணிக்கை வசூல்! - ஈரோடு செய்திகள்
🎬 Watch Now: Feature Video
Published : Sep 9, 2023, 10:34 AM IST
Bannari Temple bill tribute collection: ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது நேற்று (செப். 8) நடைபெற்றது.
பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் இரா.மேனகா, சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சு.சுவாமிநாதன், அறங்காவலர் குழுத் தலைவர் புருஷோத்தமன் மற்றும் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
ராஜன் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முடிவில் உண்டியல் காணிக்கை 96 லட்சத்து 17 ஆயிரத்து 358 ரூபாய் ரொக்கமும், 483 கிராம் தங்கமும், 993 கிராம் வெள்ளியும் இருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: "விரைவில் சட்டமன்ற தேர்தல்.. எடப்பாடியார் முதலமைச்சர்" - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி!