ETV Bharat / state

கேரளா பியூட்டிஷனை கடத்தி பாலியல் வன்கொடுமை.. ரயிலில் தப்பி வந்த இருவர் ஜோலார்பேட்டையில் கைது! - KERALA BEAUTICIAN SEXUALLY ASSAULT

கேரளாவில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ரயிலில் தப்ப முயன்ற இரு வாலிபர்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

கைதான அமீர் உசேன், ராபிக் இஸ்லாம்
கைதான அமீர் உசேன், ராபிக் இஸ்லாம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2024, 4:39 PM IST

திருப்பத்தூர்: கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் கோனி என்ற பகுதியில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் பியூட்டிசனாக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் அறை எடுத்து தனியாக தங்கி வந்துள்ளார். மேலும், அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீர் உசேன் (24), ராபிக் இஸ்லாம் (25) ஆகியோர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி இளம்பெண் அதே பகுதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை அமீர் உசேன் மற்றும் ராபிக் இஸ்லாம் இருவரும் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில், கோணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான இரண்டு போரையும் தேடி வந்த போது, இருவரும், ஜோலார்பேட்டை வழியாக சென்னை நோக்கி செல்லும் ரயிலில் தப்பிச் செல்வது தெரிய வந்தது.

இந்நிலையில், கேரளா காவல் துறையினர், இது குறித்து திருப்பத்துார் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஷ்ரேயா குப்தா ரயில் மூலமாக தப்பி வரும் இருவரையும் பிடிக்க தனிப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கேரளாவுக்கே திருப்பி அனுப்பப்படும் மருத்துவக் கழிவுகள்.. நெல்லை மாவட்ட நிர்வாகம் அதிரடி!

அதனை தொடர்ந்தது, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்த தனிப்படை காவல் துறையினர் ரயிலுக்காக காத்திருந்தனர். ஆனால், அந்த ரயில் ஜோலார்பேட்டையில் நிறுத்தம் இல்லாததால், உடனடியாக இதுகுறித்து காவல்துறையினர் ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் நிற்க நடவடிக்கை மேற்க்கொண்டனர்.

அதன்படி வாலிபர்கள் வந்த ரயில் நள்ளிரவு ஒரு மணியளவில் ஜோலார்பேட்டை 2வது நடைமேடையில் சிறிது நேரம் நின்றது. அப்போது காவல்துறையினர் மூன்று குழுக்களாக பிரிந்து ரயில் முழுவதும் சல்லடை போட்டு தேடி, ரயில் இன்ஜினில் இருந்து கடைசியாக உள்ள பொது பெட்டியில் பதுங்கி இருந்த அமீர் உசேன், ராபிக் இஸ்லாம் இருவரையும் பிடித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பின்னர் கேரளா காவல்துறையினரை வரவழைத்து அவர்களிடம் இரண்டு வாலிபர்களையும், திருப்பத்தூர் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.