வாணியம்பாடியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை - வாணியம்பாடியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை இன்று (மே.3) நடந்தது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். முன்னதாக தொழுகைக்கு வருகை தந்த இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா கருப்பு பேட்ஜ் வழங்கினார். இது குறித்து அவர், இஸ்லாமியர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் பாஜக அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் வழங்கியதாக கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST