ரக்சா பந்தன் சிறப்பு கொண்டாட்டம்.. சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய ஜெயின் சமூகத்தினர்! - mayiladhuthruai district news
🎬 Watch Now: Feature Video
Published : Aug 30, 2023, 11:59 AM IST
மயிலாடுதுறையில் ரக்க்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இடையே ஒருவருக்கு ஒருவர் விதவிதமான ராக்கிகளை கையில் கட்டி அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சகோதர சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில், நாடெங்கும் பல்வேறு கொண்டாட்டங்களுடன் வெகு விமரிசையாக ரக்சா பந்தன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று (ஆகஸ்ட். 30) மயிலாடுதுறை மாவட்டத்தில் ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி பூஜை செய்து சிறப்பாக கொண்டாடினர். மயிலாடுதுறையில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினர் ரக்சா பந்தன் விழாவை முன்னிட்டு புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி பல்வேறு பரிசுகளுடன் உற்சாகமாக கொண்டாடினர்.
பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் கையில் விதவிதமான அலங்கார ராக்கிகளைக் கட்டி, இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் விழாக் கோலம் பூண்டு கோலாகலத்தில் திளைத்து கணப்பட்டது.