அரையிறுதிப் போட்டியைக் காண மும்பை விரைந்தார் ரஜினிகாந்த்! - superstar
🎬 Watch Now: Feature Video
Published : Nov 15, 2023, 10:44 AM IST
சென்னை: மும்பையில் நடைபெற இருக்கும் இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியைக் காண நடிகர் ரஜினிகாந்த் இன்று (நவ.15) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டார். இந்த போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே (Wankhede Stadium) மைதானத்தில் வைத்து மதியம் 2 மணி அளவில் தொடங்க உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். முன்னதாக, இந்திய அணியானது நடந்து முடிந்த 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரை இறுதிக்கு தகுதி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நியூசிலாந்து அணியானது நடந்து முடிந்த 9 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று, அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. தற்போது நடைபெற இருக்கும் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.