ரஜினி நடித்த படம் வெற்றி பெற கிரிவலம் சென்ற ரசிகர்கள்! - tamilnews
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: நேற்று (ஜூலை 02 ஆம் தேதி) இரவு திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் ஆனி மாத குரு பௌர்ணமி கிரிவலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கிரிவலத்தில் சுமார் 7 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கிட்டத்தட்ட 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் மேற்கொண்டனர்.
இந்த கிரிவலத்தின் போது சேலம் மாவட்டம் மற்றும் சில மாவட்டங்களை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். அப்போது ரஜினி நடித்த 'லால் சலாம்' (lal salaam) மற்றும் 'ஜெயிலர்' (jailer) ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டுமென அண்ணாமலையாரை வேண்டி தலைவர் பாதுகாப்பு படை என்று பேனர் சுமந்து அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பாக தொடங்கி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் வந்தனர். அந்த பேனரில், மனித தெய்வத்தை காண தெய்வத்திடம் முறையிடும் கிரிவல நடைபயணம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: லஸ்ட் ஸ்டோரி நாயகி மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!