திம்பம் மலைப்பகுதியில் கனமழை - rain water
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று திம்பம் மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இந்நிலையில் திம்பம் மலைப்பாதை 27வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோரம் மழைநீர் பாறைகளை தழுவியபடி அருவியாக கொட்டியது. கனமழை காரணமாக அருவியாக கொட்டிய மழை நீரை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கண்டு ரசித்தனர். மேலும் ஒரு சிலர் அருவியின் அருகே சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST