திமுகவின் ஊழல் என அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் - கனிமொழி கொடுத்த 'அந்த' ரியாக்ஷன் - dmk
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று வருகை தந்தார். அப்போது அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது ஏப்ரல் 14ஆம் தேதி திமுக உறுப்பினர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், அவர் இன்று பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரமாக வைத்து திமுக ஃபைல்ஸ் எனத் தலைப்பிட்டு, பல்வேறு சான்றுகளுடன் கமலாலயத்தில் ஆளும் கட்சியான திமுக உறுப்பினர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார்.
இந்நிலையில் இந்த ஊழல் பட்டியல் குறித்து தங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ’அரசியலில் அவருடைய நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக தவறான விஷயங்களை பேசி வருகிறார்கள். இதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்று ஒற்றை வரியில் பதிலளித்தார்.
இதையும் படிங்க: 'அண்ணாமலை திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்'