பொதுப்பணித்துறையில் யார் குறுக்கீடும் இல்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி - Pudukkottai
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் பதவியேற்பு விழா புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவில் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி, "இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் விட கட்டுனர் துறையில் தமிழ்நாடு முன்னேற வேண்டும். கட்டுமான துறையில் யாருடைய ஆதிக்கமும் இருக்கக் கூடாது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பது தான் இந்த அரசின் நோக்கம். அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கமும்.
அமைச்சர்கள் நாங்கள் எந்த குறுக்கீடும் செய்ய மாட்டோம். பொதுப்பணித் துறையிலும் அது வரவேண்டும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். ஒரு காலத்தில் கட்டட ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பில் ஆதிக்க சக்திகள் இருந்தன. அவர்களை மீறி யாரும் ஒப்பந்தம் எடுக்க முடியாது என்ற சூழ்நிலை இருந்தது.
ஆனால் தற்பொழுது அப்படி இல்லை எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அரசு ஒப்பந்தங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி அதுதான் இந்த அரசின் நோக்கம். எல்லாம் இருப்பவர்களை இல்லாதவர்கள் ஆக்குவது திராவிட மடல் ஆட்சி கிடையாது, இல்லாதவர்களை இருப்பவர்களாக ஆக்குவது தான் திராவிட மாடல் ஆட்சி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கட்டுனர்களாக இருக்கட்டும் ஒப்பந்ததாரர்களாக இருக்கட்டும் அனைவருக்கும் எல்லா ஒப்பந்தங்களும் கிடைக்க வேண்டும் அதற்கு நாங்கள் பொறுப்பு. தமிழக அரசு பத்திரப்பதிவுத்துறையில் பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது மக்கள் வீடு கட்டுவதற்கு எளிய முறையில் அனுமதி பெற வசதியாகத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.