சாலையோர பள்ளத்தில் இறங்கிய தனியார் பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்! - tamil news
🎬 Watch Now: Feature Video
Published : Oct 3, 2023, 11:32 AM IST
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. அதேநேரம், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையத்துக்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது மாதம்பாளையம் என்ற இடத்தில் சாலை வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருந்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பேருந்து ஓட்டுநர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் விசாரணையில் தனியார் பேருந்து ஸ்டேரிங் லாக் ஆனதால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என தெரிய வந்துள்ளது.