வீட்டின் கதவை உடைத்து ரூ.28 லட்சம், 9 சவரன் நகை திருட்டு - சம்பவ இடத்தில் எஸ்பி ஆய்வு! - வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
🎬 Watch Now: Feature Video
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேவுள்ள அச்சல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (46). இவர் அதே ஊரில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு அவரது மனைவியுடன் சென்றுவிட்டார். பின்னர் வீட்டிற்கு வந்த பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 28 லட்சம் ரூபாய் ரொக்கம் 9 சவரன் நகை ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
மேலும், அந்த திருடர்கள் கைரேகை பதிய கூடாது என்பதற்காக ஆங்காங்கே மிளகாய் பொடிகளை தூவிவிட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து குமரேசன், அரூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். அதன், பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அரூர் காவல் துறையினர் மற்றும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் வீட்டில் ஆய்வு மேற்கொண்டார்.
விவசாய தொழிலி செய்து வரும் குமரேசன், தனது உறவினர்களின் நிலத்தை விற்று அதில் கிடைத்த 25 லட்சம் ரூபாயையும், தனது மாடுகளை விற்று அதில் கிடைத்த 3 லட்சம் ரூபாயும் வீட்டில் வைந்திருந்த நிலையில் இதனையறிந்த நபர்கள் தான் திருட்டி சம்பவத்தை அரங்கேற்றிருக்க கூடம் சந்தேகிகின்றனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அந்த ஊரில் இரு தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்த மூன்று வீடுகளில் திருடு போனது சம்பந்தமாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: Momos: மோமோஸ் சாப்பிடுவதில் பந்தயம்... நொடியில் பறிபோன இளைஞரின் உயிர்!