ETV Bharat / entertainment

விடுதலை -2 திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை.. 1,700 இணையதளங்களுக்கு ஐகோர்ட் செக்! - VIDUTHALAI 2 MOVIE RELEASE

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை - 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை 2 போஸ்டர், சென்னை உயர் நீதிமன்றம்
விடுதலை 2 போஸ்டர், சென்னை உயர் நீதிமன்றம் (Credits - @rsinfotainment X page, ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2024, 9:27 PM IST

சென்னை: நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை - 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிடோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை-2 திரைப்படம் உலகெங்கிலும் நாளை (டிச.20) வெளியாக உள்ளது.

இந்த படம் சட்டவிரோதமாக ஆயிரத்து 700 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் விடுதலை-2 படம் வெளியாகயுள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், அதன்மூலம் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.

இதையடுத்து, விடுதலை-2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.