ETV Bharat / state

சிபிசிஐடி கைக்கு போகும் ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் வழக்கு.. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்! - ARMSTRONG MURDER CASE

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எண்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடம், படுகொலையான ஆம்ஸ்ட்ராங்
என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடம், படுகொலையான ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2024, 9:04 PM IST

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எண்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்த வழக்கில் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான திருவேங்கடத்தை காவல்துறை விசாரணைக்காக, சென்னை மாதவரம் அருகே அழைத்து சென்றபோது, கடந்த ஜூலை 14 ம் தேதி காவல்துறையினரை தாங்கி துப்பாக்கியை பிடுங்கி காவல்துறையினரை அவர் திரும்ப சுட முயற்சித்தாக கூறப்பட்டது.

இதையடுத்து தற்காப்புக்காக போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் திருவேங்கடம் கொல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டது. உச்ச நீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதலின்படி, திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பகுதியில் மாதவரம் நீதித்துறை நடுவர் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் திருவேங்கடம் என்கவுன்டர் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியும், என்கவுன்டர் செய்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக் கோரியும் சிறைக் கைதிகள் பாதுகாப்பு அமைப்பின் இயக்குனரும், வழக்கறிஞருமான புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், எஸ்.எஸ் சுந்தர், எம்.சுதீர் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் ஆஜராகி, என்கவுன்டர் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கை இன்னும் அரசுக்கு கிடைக்கவில்லை. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் திருவேங்கடத்தின் மரணம் தொடர்பான வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணை முடிவடையாத நிலையில் இந்த வழக்கின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் யாரும் இந்த வழக்கினை தொடராதபட்சத்தில் மூன்றாம் நபரான வழக்கறிஞர் மூலமாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் எப்படி இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது எனவும் கேள்வி எழுப்பினார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், திருவேங்கடம் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.