ETV Bharat / state

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் தொழிலாளர்கள் இருவர் பலி - METTUR THERMAL POWER PLANT

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தேக்கும் டேங்க் சரிந்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் இருவர் பலியாகினர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2024, 10:53 PM IST

சேலம்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி தேக்கும் தேங்கர் டேங்க் சரிந்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் இருவர் பலியாகினர். படுகாயமடைந்த மூன்று தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நிலக்கரி டேங்க் சரிந்து விழுந்த விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் ஆனது. தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் மற்றஉம் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது நிலக்கரி குவியலில் வெங்கடேசன், பழனிசாமி ஆகிய இரண்டு தொழிலாளர்களின் உடல் மீட்கப்பட்டது. இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து இருவரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொழிலாளர்கள் உயிரிழந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அனல் மின் நிலையம் முன்பு உள்ளே நுழைய முயற்சித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அனல் மின் நிலையத்தில் தற்போது பத்துக்கு மேற்பட்ட ஜேசிபி வாகனங்களைக் கொண்டு நிலக்கரி குவியலை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தீயணைப்பு வீரர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த குவியலில் தொழிலாளர்கள் யாரேனும் சிக்கி உள்ளனரா என்ற அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.