கோவையில் களைகட்டிய போலீசாரின் பொங்கல்! நடனமாடி கொண்டாட்டம்!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: தைப்பொங்கல் திருநாளன்று புத்தாடை அணிந்து தங்களது வீடுகளின் முன் புதுப் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் எனக் குலவையிட்டு சப்தமிட்டு கொண்டாடுவது தமிழர்களின் பாரம்பரியம். அந்த வகையில் கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் நேற்று(ஜன.15) பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
காவலர்கள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு அங்குள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து காவலர்களுக்கு மியூசிக் சேர், கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் குதிரை வண்டியில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இதே போன்று கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் கருமத்தம்பட்டி காவல் நிலைய கண்காணிப்பாளர் தங்கராமன் கலந்து கொண்டு பொங்கல் விழாவைக் கொண்டாடினார். இதனையடுத்து காவலர்களுக்கு பாரம்பரிய விளையாட்டான உறியடித்தல் போட்டிகள் நடைபெற்றது. பின்னர் காவலர்கள் அனைவரும் இணைந்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.