Bus theft: அசந்த நேரத்தில் பணத்தை திருடும் கில்லாடி லேடிஸ்... கையும் களவுமாக சிக்கியது எப்படி? - govt Bus theft case
🎬 Watch Now: Feature Video
Published : Aug 30, 2023, 2:22 PM IST
திருப்பூர்: நஞ்சப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் வானதி. இவர் பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்தில் போயம்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அந்த பேருந்து பாண்டியன்நகர் அருகே வந்த போது, அதே பேருந்தில் பயணித்த 2 பெண்கள் வானதியின் பணப்பையை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வானதி சக பயணிகள் உதவியுடன் அந்த 2 பெண்களையும் பிடித்து பாண்டியன்நகர் போலீஸ் சோதனைச் சாவடியில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அச்சோதனை சாவடியில் இருந்த பெண் போலீசார் அந்த பெண்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதில் சிறிய சிறிய பண்டல்களாக பணம் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பெண்களை திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் இருவரும் மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த உஷா (வயது 53), மஞ்சு (வயது 45) என்பது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து இருவரும் வானதியிடம் திருட முயன்றதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நல்லூரில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர்.