அழகாக இருக்க வேண்டும் என யார் தான் நினைக்க மாட்டார்கள்? அதுவும் பண்டிகை நாட்களில் சொல்லவா வேண்டும். பண்டிகை தினங்களில் என்ன தான் மேக்கப் போட்டாலும், சிறிது நேரம் கழித்து முகம் பொலிவிழந்து காணப்படும். அந்த மாதிரியான சூழ்நிலையில், முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்? எப்போதும் முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்வது? போன்ற உங்களது சந்தேகங்களுக்கு இந்த தொகுப்பில் பதில் உள்ளது.
ஆரஞ்சு சாறு: இயல்பாகவே வைட்டமின் சி முகம் பளபளப்பாகவும், முகப்பரு வராமல் தடுக்க உதவியாக இருக்கிறது. அந்த வகையில், ஒரே இரவில் முகம் பளபளப்பாக மாறுவதற்கு, ஒரு கிண்ணத்தில் சிறிது ஆரஞ்சு சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர், இதை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வர, முகப்பரு மறைய தொடங்கும்.
தேன்: சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாக வைக்கவும், முகப்பரு மற்றும் தழும்புகள் மறைய தேன் உதவுகிறது. முகத்திற்கு தேன் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர், தேன் அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் உள்ள கருமை நாள்பட நீங்கும்.
பால்: காய்ச்சாத பசுப்பாலை தினமும் காலை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால், சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் டைரோசின் அளவை பால் கட்டுப்படுத்தி முகத்தை பளபளப்பாக மாற்றும்.
ஆலிவ் எண்ணெய்: இரவு தூங்க செல்வதற்கு முன் ஆலிவ் ஆயிலை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். சருமத்தை இளமையாக வைக்கவும், சிறந்த ஆக்ஸிஜினேற்றியாகவும் ஆலிவ் எண்ணெய் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள்: ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ள மஞ்சள், சருமத்தை பளபளப்பாக்குவது மட்டுமல்லாமல், புத்துணர்ச்சியுடன் வைக்க உதவியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், மஞ்சள் சருமத்தில் கொலோஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்நிலையில், ஒரு கிண்ணத்தில் 3 டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கொஞ்சமாக பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின் கழுவ வேண்டும்.
இதையும் படிங்க:
குளிர்காலத்தில் முகம் கருமையாக மாறுகிறதா? கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள் இதான்!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.