ETV Bharat / bharat

5,8ஆம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து...மத்திய அரசின் பள்ளிகளில் புதியமுறை! - NO DETENTION POLICY

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், இரண்டு மாதங்களில் மீண்டும் மறு தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.

பெங்களூரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி (கோப்புப்படம்)
பெங்களூரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி (கோப்புப்படம்) (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2024, 6:02 PM IST

புதுடெல்லி: 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், இரண்டு மாதங்களில் மீண்டும் மறு தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,"5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வு முடிவு வெளியிடப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மறு தேர்விலும் மாணவர்கள் தோல்வி அடைந்து விட்டால், அவர்களை 5ஆம் வகுப்பில் அல்லது 8ஆம் வகுப்பில் மீண்டும் படிக்க அனுமதிக்க வேண்டும்.

வழிகாட்ட அறிவுறுத்தல்: மீண்டும் அதே வகுப்பில் குழந்தை படிக்கும்போது வகுப்பு ஆசிரியர் அந்த குழந்தைக்கு சிறப்பு கவனம் செலுத்தி வழிகாட்ட வேண்டும். அதே போல அந்த குழந்தையின் பெற்றோருக்கும் வழிகாட்ட வேண்டும். பல்வேறு கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் கற்றல் குறைபாடுகள் இருப்பின் அதனைக் கண்டறிந்து சிறப்பான பயிற்சியை அளிக்க வேண்டும் எனினும், எந்த ஒரு குழந்தையையும் தொடக்கப்பள்ளி வரை பள்ளியில் இருந்து நீக்கப்படக் கூடாது. இந்த உத்தரவு மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திர வித்யாலயா, நவோதையா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் உட்பட 3000த்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பொருந்தும்,"என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2024 -இல் சென்னை ஐஐடியின் நீளும் சாதனைப் பட்டியல் இதோ உங்கள் பார்வைக்காக..!

இது குறித்து பேட்டியளித்த மத்திய கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார், "ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் இறுதித் தேர்வில் குழந்தைகள் தோல்விடைந்தால், மீண்டும் அவர்கள் இரண்டு மாதங்களுக்குள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மீண்டும் தேர்வில் தோல்வியுற்றால், அவர்கள் தேர்ச்சி பெற்றதாக கருதமாட்டார்கள். அதே நேரத்தில் எட்டாம் வகுப்பு படிககும் வரை அத்தகைய குழந்தைகளை பள்ளியை விட்டு அனுப்பக் கூடாது,"என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர், "2019ஆம் ஆண்டின் கல்வி உரிமை சட்டத்திருத்தத்தின் கீழ் ஏற்கனவே 16 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேச மாநிலங்கள் 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்த முறையை பின்பற்றி வருகின்றன. ஹரியானா, புதுச்சேரி மாநிலங்கள் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மீதமுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படுத்தும்,"என்றார்.

தமிழக அரசு ஏற்க வேண்டும்: இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார்,"தொடக்கக்கல்வி முடியும் வரை எந்த பள்ளியில் இருந்தும் குழந்தைகள் வெளியேற்றப்படக்கூடாது என்கிற புதிய விதிமுறைகளின் படி அனைத்து வகை தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர்கள் தொடர்ந்து படிப்பார்கள். ஐந்தாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படிப்பதன் மூலம் மாணவர்கள் எண்ணிக்கையை பள்ளிகள் தக்க வைத்துக் கொள்ள முடியும்..

தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமாக அனைவருக்கும் கல்வி தரமான கல்வி என்பதை இந்த விதிகளின் படி உறுதி செய்ய முடியும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த கல்வி மறு சீர்த்திருத்தத்தை மாநில அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கிறோம்,"என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.