ப்ளஸ் டூ தேர்வு: இயற்பியல், பொருளியல் தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி! - வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது
🎬 Watch Now: Feature Video
சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளான இயற்பியல், பொருளியல் தேர்வுகள் இன்று நடைபெற்றன. இந்நிலையில் இயற்பியல், பொருளியல் தேர்வுகள் எளிதாக இருந்தது என மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித்தாள் தேர்வுகளில் 50,000 பேர் தேர்வு எழுதாதது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது. தேர்வினை எழுதி முடித்த மாணவர்கள், இயற்பியல் பாடத்திற்கான வினாத்தாள் பாடத்தின் பின்பகுதியில் உள்ள கேள்விகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று மதிப்பெண் வினாவில் ஒரு சில கேள்விகளும் ஒரு மதிப்பெண் வினாவில் சில கேள்விகளும் பாடப் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். அதே போல் பொருளியல் தேர்வினை எழுதி விட்டு வந்த மாணவர்களும் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது எனக் கூறினர்.
இதையும் படிங்க: உலக "கிக் பாக்ஸிங்": தங்கம், வெள்ளி என 4 பதக்கங்களை வென்று திரும்பிய அரசுப்பள்ளி மாணவர்கள்!