Palani Murugan Temple; பழனி முருகன் கோயில் புதிய மின் இழுவை ரயில் பெட்டியை வல்லுநர் குழு ஆய்வு! - வல்லுநர் குழு
🎬 Watch Now: Feature Video
Published : Oct 20, 2023, 7:55 AM IST
திண்டுக்கல்: பழனி தண்டாயுதபானி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். மாற்றுத்திறனாளி பக்தர்கள், முதியவர்கள், குழந்தைகள் எளிதாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்பில், மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் ரோப் கார் சேவையை இயக்கப்பட்டு வருகிறது.
மின் இழுவை ரயில் நிலையத்தில் இருந்து மூன்று மின் இழுவை ரயில்கள் இயக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் புதிதாக 75 பேர் அமர்ந்து செல்லும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின் இழுவை ரயில் பெட்டியை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும், பழனி கோயில் அறங்காவலர் குழுத் தலைவருமான சந்திரமோகன் நன்கொடையாக வழங்கினார்.
புதிய பெட்டியை மூன்றாவது மின் இழுவை ரயிலில் பொருத்தும் பணியில் கோயில் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. தற்போது பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், மின் இழுவை ரயிலை சோதனை ஓட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிய மின் இழுவை ரயில் பெட்டியை தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் மற்றும் ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர். புதிய மின் இழுவை ரயில் பெட்டி, பக்தர்கள் பயணம் செய்ய பாதுகாப்பானது என வல்லுநர் குழு பாதுகாப்பு தரச் சான்றிதழ் வழங்கிய பிறகு பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது.