கோத்தகிரியில் பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ஓபிஎஸ்!
🎬 Watch Now: Feature Video
Published : Dec 27, 2023, 7:07 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகையில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக கோத்தகிரி வழியாக வந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, கோத்தகிரி டார்லிங்டன் பகுதியில் பாரதியார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்தனர். பின்பு, படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, அவர்களுடன் ஓபிஎஸ் நடனம் ஆடினார். அவருடன் புகழேந்தி மற்றும் கட்சி நிர்வாகிகளும் நடனம் ஆடினர். பின் உதகைக்கு அவர் காரில் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் சூலூர் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடம், ஆரியம் என்றால் என்ன என்பது தெரியாது. திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாது. ஆக்சிடென்டில் பொதுச் செயலாளர் ஆனார்.
சீக்கிரம் அவுட் ஆகி விடுவார் என்றும், ரகசியங்களை நான் அவுத்து விட்டால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குத்தான் செல்ல வேண்டும் என்று கூறினார். மேலும், கோரப்பிடியிலிருந்து அதிமுகவைக் கைப்பற்றி, மீண்டும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மாவிடம் ஒப்படைத்தால்தான் நன்றியாக இருக்கும் என்றார்.