Ooty:தொடங்கிய கோடை விடுமுறை... சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் ஊட்டி! - Ooty is visited by many tourists
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: நீலகிரியில் கோடைகால சீசன் தொடங்கிவிட்டதால் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்கும், இதமான காலநிலையினை அனுபவிப்பதற்கும் அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம், தோட்டக்கலைத்துறையின் கீழ் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். இதனிடையே, நேற்று தாவரவியல் பூங்காவிற்கு 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த நிலையில் இன்று (ஏப்.30) ஞாயிறு வாரவிடுமுறை என்பதாலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், திங்கள்கிழமை மே தினம் விடுமுறை என்பதாலும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக லட்சக்கணக்கான மூன்று லட்சத்திற்கும் மேலான வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்த நிலையில், அவை தற்போது செடிகளில் பூக்களாக பூத்துக் குலுங்குகின்றன. இவை இந்த கோடை சீசனுக்கு சுற்றுலாப் பயணிகள் கண்களுக்கு விருந்தளிப்பதாக அமையும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்து வருகின்றனர். ஆகவே, ஊட்டியில் தற்போது ரம்மியமான கால நிலைகாணப்படுவதால் இதனை அனுபவிக்க, சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.