கோடை வெப்பத்தை தணிக்க ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனர். தற்போது கோடைக் காலம் தொடங்குவதாலும், இன்று ஞாயிறு விடுமுறையைக் ஏராளமானோர் ஒகேனக்கலில் குவிந்தனர்.
ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்து அருவியின் அழகைக் கண்டு ரசித்தனர். ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதியது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததாலும், கோடை வெப்பத்தைத் தணிக்க ஒகேனக்கலுக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
மேலும், ஒருசில பரிசல்களில் பாதுகாப்பு உடை (லைஃப் ஜாக்கெட்) அணியாமல், ஆபத்தை உணராமல், பரிசல் பயணம் செல்கின்றனர். இன்று சுற்றுலாப் பயணிகள் விடுமுறையைக் கொண்டாடக் குவிந்ததால், ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் களை கட்டியது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாவைத் தொழிலை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் பரவல் அதிகரிப்பு.. ஆய்வு சொல்வது என்ன?