உதகையில் தீ விபத்து - மலை ரயில் 1 மணி நேரம் தாமதம்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த கடும் உறை பனிப்பொழிவு மற்றும் பகல் நேரங்களில் நிலவி வரும் வெயிலின் காரணமாக வனப்பகுதிகளில் செடி, கொடிகள் முற்றிலும் கருகி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உதகை, கூடலூர், குன்னூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வருவதால் இதனை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உதகை தீட்டுக்கள் குப்பை குழி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உதகை நகர் முழுவதும் மின்சார விநியோகம் ரத்து செய்யப்பட்டது. இதேபோல் வேலி வியூ பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உதகை குன்னூர் இடையே மலை ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற உதகை தீயணைப்புத் துறையினர் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டும் அருகிலுள்ள வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவாமல் இருக்க தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த கார்… காரணம் என்ன?