தேங்கிய மழைநீரால் திணறிய வாகன ஓட்டிகள்! - பல்லாவரம் பழைய சந்தை
🎬 Watch Now: Feature Video
சென்னை: பல்லாவரம் ஜி.எஸ்.டி.சாலையில் இருந்து பல்லாவரம் பழைய சந்தை சாலை வரை முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தேங்கி நிற்கும் மழை நீர் வெளியேறாமல் உள்ளதால் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கன்டோன்மென்ட் நிர்வாகம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST