ETV Bharat / entertainment

நெல்லையில் களைகட்டிய இளையராஜாவின் இசை நிகழ்ச்சி.. அடுத்த எந்த ஊர்? கேள்வி எழுப்பிய இசைஞானி - ILAIYARAJA CONCERT

Ilaiyaraja: இசைஞானி இளையராஜா நெல்லையில் நடத்திய இசை நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து உற்சாகத்துடன் புதிய அறிவிப்பு ஒன்றை இளையராஜா வெளியிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜா (Credits: Ilaiyaraja 'X' Page)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 19, 2025, 4:41 PM IST

சென்னை: இசைஞானி இளையராஜா நெல்லையில் நடத்திய இசை நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து உற்சாகத்துடன் புதிய அறிவிப்பு ஒன்றை இளையராஜா வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் இசைஞானி இளையராஜா தற்போதும் சிறிய பட்ஜெட் பெரிய பட்ஜெட் படம் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் அவரது இசையில் வெற்றிமாறனின் ’விடுதலை பாகம் 2’, மற்றும் ’ஜமா’ ஆகிய படங்கள் வெளியாகின. அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் பரவலாக ரசிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்ந்த போதிலும் இளையராஜா என்றும் மாறாத சுறுசுறுப்புடன் திரைப்படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து வெளிநாடுகளிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் இசை கச்சேரி நடத்தி வருகிறார் இளையராஜா.

கடந்த வருடம் கும்பகோணத்தில் இசைக் கச்சேரியை நடத்திய இளையராஜா, அதில் கலந்து கொண்டு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தோடு மட்டுமில்லாமல் அப்போது தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் அவரின் இசை பயணம் தொடரும் என குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நீடித்தது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். பெரும்பாலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மட்டுமே இசை கச்சேரி நடத்தி வந்த இளையராஜாவிற்கு, நெல்லை ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து இளையராஜா நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது! நான் முன்பு பதிவிட்டது போல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..?” எனக் கேள்வியும் எழுப்பியுள்ளார். இந்த பதிவுக்கு கீழ் ரசிகர்கள் அவரவர்களின் ஊர் பெயர்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக பொங்கல் விடுமுறை நாளையொட்டி இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி காண முன்பதிவு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார்..? தொலைக்காட்சியில் ஒளிபரப்பகும் பிரம்மாண்ட இறுதி நிகழ்ச்சி

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த இசை நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் வந்துள்ளன. இதனால் நிகழ்ச்சி தொடங்குமுன் நேற்று மாலை 6 மணியிலிருந்தே கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் கார்கள் அணிவகுத்து நின்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருநெல்வேலியை கடந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற பிறவாகனங்கள் இந்த நெரிசலில் சிக்கி திணறின. இதுபோல் இன்னிசை நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் வாகன நெரிசல் காணப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.