Howrah: ஹவுராவில் தீ விபத்து - 15 கடைகள் தீயில் எரிந்து சேதம்! - பெரும் தீ விபத்து
🎬 Watch Now: Feature Video
ஹவுரா (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 15 கடைகள் எரிந்து சேதம் ஆகியுள்ளது. இருப்பினும், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, தீ விபத்து ஏற்பட்ட உடன் உடனடியாக, அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, 12 வாகனங்களோடு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், முதற்கட்ட தகவல்களின்படி, இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை. இச்சம்பவம் ஹவுரா காவல் நிலையம் அருகே உள்ள மங்கல்ஹாட் பகுதியில் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து தீ மளமளவென பல கடைகளுக்கும் பரவியது என கூறப்படுகிறது.
இதனையடுத்து தீயணைப்பு வாகனங்களில் முதலில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டது. மேலும், தீயை அணைக்கும் பணியில் உள்ளூர்வாசிகளும் உதவிக்கரம் நீட்டினர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விரைவு அதிரடிப்படை (Royal Air Force) குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், தீ மளமளவென பெரிய பகுதியில் பரவியதால், தீயணைப்பு வீரர்கள் அனைத்து பக்கங்களிலும் தண்ணீரை பீய்ச்சியடிக்கத் தொடங்கினர்.