காதலுக்காக பெண்ணாக மாறிய ஆண்! திருநங்கையர்கள் தலைமையில் திண்டுக்கல்லில் நடந்த திருமணம்! - love
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: வேடபட்டியைச் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் வயது (21) காதலுக்காக சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக(திரு நங்கை) மாறி தன்னுடய பெயரை மாயா என்று பெயர் மாற்றிக்கொண்டார்.
இதே போல் மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி வயது (24). இவர் ஆணாக (திரு நம்பி) மாறி தன்னுடைய பெயரை கணேஷ் என்று மாற்றிக்கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் திருநங்கையர்கள் தலைமையில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு பின்பு கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 14ஆம் தேதி) காலை திண்டுக்கல் அபிராமியம்மன் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியில் இந்து முறைப்படி தாலிகட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் முதலில் இவர்களது திருமணத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு வியப்படைந்தனர். பின்னர் இவர்களது திருமணத்திற்கு பொதுமக்கள் அனைவரும் கூடி அட்சதை தூவி வாழ்த்தினர்.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திண்டுக்கல் அபிராமியம்மன் கோவிலில் இவர்களது திருமணத்தை அறநிலையத்துறையைச் சார்ந்தவர்களோ, அர்ச்சகர்களோ பங்கேற்கவில்லை. மேலும் இந்த திருமணமானது, பதிவு செய்யப்படாமல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது .
இதையும் படிங்க :சென்னையில் மந்திரவாதி கத்தியால் குத்தி கொலை.. நடந்தது என்ன?