ஏடிஎம் இயந்திரத்தை கோடாரியால் உடைத்து நாசம் செய்த நபர் கைது.. - Man arrested for smashing ATM machine with axe
🎬 Watch Now: Feature Video
வேலூர்: ஏடிஎம் இயந்திரத்தை கோடாரியால் அடித்து உடைத்து நாசம் செய்த நபர் கைதுசெய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் ஊசூர் பகுதியில் இண்டி கேஸ் ஏடிஎம் உள்ளது. அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (வயது 54) என்பவர் இன்று (ஜூலை 3) ஏடிஎம் வந்துள்ளார். இவர் லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
கந்தசாமி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தபோது இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. அதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த அவர், வீட்டிற்கு சென்று கோடாரி எடுத்து வந்து ஏடிஎம் இயந்திரத்தை அடித்து உடைத்து நாசம் செய்துள்ளார். கந்தசாமியின் செயலைக் கண்ட அருகில் உள்ளோர் உடனடியாக அவரை மடக்கி பிடித்து அரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கந்தசாமியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் வராத காரணத்தால் கோடாரி கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.