மகா பைரவாஷ்டமி 2023; சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காலபைரவர்!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஞானம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நீக்கவல்ல பரிகார ஸ்தலமாகவும், சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இத்தகைய பிரசித்தி பெற்ற தலத்தில், கார்த்திகை மாத தேய்பிறை மகா பைரவாஷ்டமி எனும் பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது சந்தனக்காப்பு அலங்காரத்தில், மூலவர் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சார்த்தி செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தஞ்சை மாவட்டத்தின் உள்ள பல முக்கிய ஊர்களில் இருந்தும் நூற்றுக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு, காலபைரவரை தரிசனம் செய்தனர்.
மேலும், பக்தர்கள் தங்களது பிராத்தனைகளை நிறைவேற்றித் தர வேண்டி பூசணிக்காய், தேங்காய், வாழைப்பழம் துணிகளில் கட்டப்பட்ட மிளகு ஆகியவற்றைக் கொண்டும் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், ஆகியவற்றைக் கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: மூன்று நாட்களாக முடங்கி கிடக்கும் தென்சென்னை.. இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?