Madurai to Bodi Train Service: 12 ஆண்டுக்கு பிறகு மதுரை-போடி ரயில் சேவை : புழுதி பறக்க நடைபெற்ற சோதனை ஓட்டம் - train trial run
🎬 Watch Now: Feature Video
தேனி: மதுரை-போடி இடையே விரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. சோதனையோட்டத்தின் போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் புழுதி பறக்கச் ரயில் என்ஜின் சென்று சோதனையோட்டம் நிறைவுபெற்றது. தெற்கு இந்தியன் ரயில்வே புதிதாக மதுரை-போடி இடையே மீண்டும் ரயில் சேவையை இயக்க முடிவு செய்ததனையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மதுரை-போடி இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த ரயில் பாதையில் முதல் கட்டமாக மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் போக்குவரத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில் மதுரை முதல் போடி வரை பணிகள் முடிந்ததை தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து தேனி வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் நாளை முதல் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது.
அதுபோல், சென்னை-மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை போடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட ரயில் சேவையும் நாளை முதல் தொடங்குகிறது. ரயில் போக்குவரத்து நீட்டிப்பை முன்னிட்டு மதுரை-போடி இடையே விரைவு ரயில் சோதனை இன்று நடந்தது. 110 கி.மீ. வேகத்தில் இந்த விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இன்று 2 பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டது. உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக போடிக்கு இந்த ரயில் 110 கி.மீ வேகத்தில் விரைந்து சென்றது.
12 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் நாளை போடி முதல் மதுரை வரையிலான முழு இரயில் சேவை தொடங்குகிறது. மேலும் வாரம் மூன்று முறை போடி முதல் சென்னை வரையிலான ரயில் சேவையும் தொடங்கபடவுள்ளதால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஏரோபிளேன் ரிப்பேர் பாக்கலாம் : சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி