ETV Bharat / state

பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவது ஏன்? - PONGAL FESTIVAL

தமிழ்நாடு முழுவதும் தை முதல்நாளான இன்று பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது என்று இந்த தருணத்தில் அறிந்து கொள்வது சரியாக இருக்கும்.

பொங்கல் திருநாள்
பொங்கல் திருநாள் (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2025, 6:01 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தை முதல்நாளான இன்று பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது என்று இந்த தருணத்தில் அறிந்து கொள்ளவது சரியாக இருக்கும்.

உழவர்களின் திருவிழா பொங்கல் திருநாள் என்பது அறுவடை திருவிழாவாக தமிழ்நாட்டில் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை மாதத்தின் முதல் நாளே பொங்கல் நாள் என்பது நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். தமிழர்கள் வேளாண்மையை முதன்மை தொழிலாக கொண்டு வியர்வை சிந்த உழைப்பவர்களாவர். நெல், சிறு தானியங்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்களை தமிழ் மாதத்தின் ஐப்பசி மாதத்தில் பெய்யும் அடை மழை காலத்தில் விதைப்பது தமிழர்களின் வழக்கம்.

அறுவடை திருவிழா: அடைமழை காலத்தில் நிரம்பிய குளம், ஏரி, ஆறுகள் ஆகியவற்றின் மூலம் விதைத்த பயிர்களுக்கு போதுமான நீர் கிடைத்தது. நீர் நிலைகளில் தேங்கியிருக்கும் நீரை பயன்படுத்த பாசன வசதியையை அமைத்து அதனை வெற்றிகரமாக தமிழர்கள் நிர்வகித்து வந்திருக்கின்றனர் என்பதும் வரலாறு அறிந்த உண்மை. வேளாண்மையில் சிறந்து விளங்கிய தமிழர்கள் தங்களது நெல் உள்ளிட்ட பயிர்களை மார்கழி மாதத்தின் கடைசியில் அறுவடை செய்து அந்த அறுவடையில் கிடைத்த நெல்லை அல்லது சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை வேளாண் உழைப்பாளர்களுக்கும் கூலியாக தானியங்களை விவாயிகள் வழங்குவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

அறுவடை திருவிழா தங்கள் நிலத்தில் இருந்து அறுவடை செய்த தானியங்களில் இருந்து புத்தரிசி தயாரித்து அதனை பொங்கலன்று புதிய மண்பானையில் சமைத்து, இயற்கை வழங்கிய மழை, வெயில் போன்ற கொடையால் கிடைத்த தானியத்தை சூரியனுக்கு படைத்து அந்த நாளை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கொண்டாடும் அறுவடை நாள் விழாவே பொங்கல் திருநாள் என தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது.

இன்றைக்கும் தஞ்சை, நாகபட்டினம், திருவாரூர், திருச்சி போன்ற காவிரி ஆறு பாயும் டெல்டா மாவட்டங்கள், தென்பெண்ணை ஆறு பாயும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும், வைகை ஆறு பாயும் மதுரை, திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்கள் தாமிரபரணி பாயும் நெல்லை, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களிலும் வசிக்கும் லட்சகணக்கான விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் கடந்த அக்டோபர் மாதம் பயிரிடப்பட்ட நெல்லை அறுவடை செய்து அதில் இருந்து கிடைக்கும் புத்தரிசியை கொண்டு பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

வரலாற்றில் பொங்கல் திருநாள்: பொங்கல் திருநாள் என்பது பிற்காலத்தில் தமிழ்நாட்டில் வழக்கில் வந்த சொல்லாகும். முந்தைய வரலாற்றில் பொங்கல் திருநாள் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்று கல்வெட்டு அறிஞர்கள் கூறுகின்றனர். குறி்பபாக ஒரு சர்வதேச தமிழ் இணையதளத்துக்கு பேட்டியில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கல்வெட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்ரமணியன், முதலாம் ராஜேந்திரன் காலத்து திருவொற்றியூர் கல்வெட்டு `புதியீடு விழா’ எனப் பொங்கல் குறிப்பிடப்படுகிறது. புதியீடு என்பது முதல் அறுவடை எனப்படுகிறது,"என்று கூறியுள்ளார்.

பிற மாநில கொண்டாட்டங்கள்: இதன்படி பார்க்கும்போது வரலாற்று காலத்தில் பொங்கல் என்பது அறுவடை திருநாள் என்றே கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது என்பதை அறிய முடியும். 'நெற்பல பொலிக! பொன் பெரிது சிறக்க...' எனப் பழந்தமிழ் இலக்கியமான ஐங்குறுநூறு கூறுகிறது.மேலும் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சங்கராந்தி என்ற பெயரிலும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் அறுவடை திருநாளான பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. எனவே பொங்கல் திருநாளை முதலில் அறுவடைத் திருநாளாக கொண்டாடியது தமிழர்கள் என்பதில் ஒரு தற்பெருமையும் செருக்கும் அடங்கியிருக்கிறது.

தமிழர்களின் ரத்தத்தோடு கலந்தது பொங்கல்: தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளுக்கு முன்பே பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இது தவிர தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பொங்கல் விழா, பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் கொண்டாடுவதற்கு வசதியாக பச்சரிசி, பொங்கல், பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் வழங்கி வருகிறது. தமிழர்களின் ரத்தத்தோடு கலந்தது பொங்கல்!

இயற்கை நமக்கு அளித்த உணவு எனும் கொடைக்கு பதிலுக்கு இயற்கைக்கே நன்றி தெரிவித்து அதனை கொண்டாட்டமாக முன்னெடுக்கப்படும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இந்த டிஜிட்டல் யுகத்தில் மட்டும் அல்ல. இன்னும் வரப்போகும் அதி நவீன காலங்களிலும் நிலைத்திருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.