நெல்லையில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்! - lot of people participated in surasamhara program
🎬 Watch Now: Feature Video
Published : Oct 26, 2023, 11:47 AM IST
திருநெல்வேலி: தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை எருமை கிடா மைதானத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தசரா பண்டிகை ஆண்டுதோறும் வட மாநிலங்கள் மற்றும் மைசூரில் வெகு விமரிசியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதற்கு அடுத்தபடியாக நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா திருவிழா, தென் மாநிலங்களில் பிரசித்தி பெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள மிக விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு தசரா விழா, கடந்த அக்டோபர் 14ஆம் தேதி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தூத்துவாரி அம்மன், வடக்கு தெற்கு முத்தாரம்மன், பேராத்து செல்வி அம்மன் உள்ளிட்ட 11 கோயில்களில் தசரா திருவிழா தொடங்கியது.
10 நாட்கள் நடைபெற்ற நவராத்திாி தசரா திருவிழாவில் தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்றது. 10ஆம் நாளான விஜயதசமியையொட்டி, இரவு அம்மன் கோயில்களிலிருந்து சிம்ம வாகனத்தில் போர்க்கோலம் புாிந்து வண்ண மின்னொளியில் வீதிகளில் வலம் வந்தன.
இந்த நிகழ்வின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று அதிகாலையில் நடைபெற்றது. எருமை கிடா மைதானத்தில் அனைத்து சப்பரங்களும் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து ஆயிரத்தம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.