கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும்: தன் பாலின ஈர்ப்பாளர்கள் கோரிக்கை!
🎬 Watch Now: Feature Video
சென்னை: உலகம் முழுவதும் தன்பாலின ஈர்ப்பாளர்கள்(LGBTIQA+) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஹேப்பி ப்ரைட் மாதம்(Happy Pride Month) என ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் 15-வது ஆண்டாக 'ஹேப்பி ப்ரைட்' நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தன்பாலின ஈர்ப்பார்களுக்கு (LGBTIQA+) எதிரான ஒடுக்குமுறைகளைக் கண்டித்தும், அவர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் சென்னை வானவில் சுயமரியாதை நடைப்பயணம் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே நடைபெற்றது.
சமத்துவம், சுயமரியாதை, மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் பாலின வேறுபாடின்றி பலரும் கலந்து கொண்டனர். தங்கள் உணர்வுகளை இந்த சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும் மேலும் அவர்களின் உரிமையை நிலைநாட்டக் கல்வி, வேலைவாய்ப்பில் போன்ற அடிப்படைகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக நடந்து சென்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் சிலர் தமிழகத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான பாதுகாப்பும், முன்னுரிமையும் அளிக்கப்படுவதாகவும், தற்போதைய அரசு, திருநங்கை நலவாரியம் உட்பட ஊக்கத் தொகை எனக் கல்வி வேலைவாய்ப்புகளில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்றும் மற்ற மாநிலங்களிலும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், சமூக ரீதியாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், சக மனிதர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்த மேற்கு வங்க நபர் கைது.. ஆம்பூரில் நடந்து என்ன?