வால்பாறையில் உலா வரும் சிறுத்தை வீடியோ வைரல்! - valparai
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: வால்பாறை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தை வீடியோ வைரல் ஆகி வருகிறது. இரவு நேரங்களில் அப்பகுதியில் உலா வந்த சிறுத்தையை சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாடுவது வழக்கம். வால்பாறை ஒட்டி உள்ள எஸ்டேட் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுகிறது. மேலும், இது இரவு நேரங்களில் மட்டுமே உலா வருகிறது.
மேலும், இரவு நேரங்களில் சுற்றுலா செல்லும் பயணிகள் அதிக அளவில் வால்பாறைக்கு வருவதால் வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவைத் தேடி வரும் போது சுற்றுலாப் பயணிகளால் தொந்தரவுகளுக்கு உள்ளாகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் இரவு 7 மணிக்கு மேல் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. தற்போது இந்த வீடியோ வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:புள்ளி விவரங்களின் முன்னோடி கருணாநிதி என்று கூறுவதா? - ஈபிஎஸ் மீது ஓபிஎஸ் ஆதரவாளர் தாக்கு!