கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடல்; வனத்துறை அறிவிப்பு! - விபத்து
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருவது வழக்கம். தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான சுற்றுலா தலங்களாக இருக்கும் மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மர காடுகள், தூண் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயற்கையின் அழகை ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் இங்கு படையெடுத்து வருவதுண்டு.
இந்த நிலையில் நேற்று பைன் மர காடுகள் பகுதியில் வாகனம் விபத்துக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது. மேலும் அந்த விபத்தில் பலர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்பகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதாக கூறி, தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மறு உத்தரவு வரும் வரை தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது. மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் போதிய சாலை வசதி மற்றும் வாகனம் நிறுத்துவதற்கு போதிய இடம் இன்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.