விழுப்புரம் விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்! - minister monmudi
🎬 Watch Now: Feature Video

விழுப்புரம்: விழுப்புரம் நகரப் பகுதியான மகாராஜபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மின் மயானம் கட்டுமான பணி மற்றும் கீழ்பெரும்பாக்கம் பகுதில் கட்டப்பட்டுள்ள நூலகம், பாண்டியன் நகரில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎ.ன்.நேரு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை விழுப்புரத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதால் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ததாக கூறினார்.
மேலும், விழுப்புரம் நகரத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் இன்னும் 2 மாதங்களில் முடிவடையும் எனவும் தெரிவித்தார். மேலும் விழுப்புரம் நகராட்சிக்குட்டபட்ட பகுதிகளில் 6 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையே வசிப்பதால், இனி வரும் காலத்தில் சுமார் 6 லட்சம் மக்கள் தொகையை எட்டியவுடன் விழுப்புரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி மாற்றம் செய்யப்படும்" என அமைச்சர் கே.நேரு தெரிவித்தார்.